உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், இந்திய கடற்படையில் இன்று இணைக்கப்பட்டன.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்திலுள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் 2 ஆயிரத்து 392 கோடி ரூபாய் செலவில் INS Nipun மற்றும் INS Nistar ஆகிய 2 கப்பல்கள் கட்டப்பட்டன.அந்த கப்பல்களை கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதையடுத்து பேசிய அவர், 1971ம் ஆண்டு பணியில் ஈடுபடுத்தப்பட்ட INS Nistar கப்பலின் பெயரையே புதிய கப்பலுக்கு வைத்திருப்பதாகவும், 1971ம் ஆண்டு கப்பலானது, இந்தியா பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் காஜியை இந்திய கடற்படை கண்டுபிடித்து அழித்த பணியில் பெரும் பங்காற்றியது என்றும் தெரிவித்தார்.