திமுக எம்.பி ஆ.ராசாவை கண்டித்து தமிழகமெங்கும் வருகிற 26 ஆம் தேதி அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பு, மரபு, தொன்மை, இறை நம்பிக்கையை இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருவதாக சாடியுள்ளார்.
தமிழினத் தாய்மார்களை தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை கைது செய்யாமல், அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினரை பொய் வழக்கில் கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கிறார்.