மத்திய பிரதேசத்தில், தனக்கு வழங்கப்பட்ட வாழைப்பழங்களை எடுத்து வைத்துக்கொண்ட பாகனை யானை மிதித்து கொன்றது.
ஹீரா என்ற அந்த பெண் யானையை அதன் பாகன் ஊர்வலமாக அழைத்துச்சென்றபோது, அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் ஒருவர் பாகனிடம் ஒரு சீப்பு வாழைப்பழங்களை கொடுத்துள்ளார்.
அவற்றை யானைக்கு தராமல் தனது பையில் வைத்துக்கொண்டதால் ஆத்திரமடைந்த யானை துதிக்கையால் பாகனை தூக்கி தரையில் வீசி அடித்து, தனது கால்களால் மிதித்து கொன்றது.