கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றில் மிதந்து வந்த அட்டைப்பெட்டிக்குள் கட்டு கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுக்களை ஆசையுடன் எடுக்க முயன்ற நபர் அவை போலியானவை என அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
ஆற்றிங்கல் பகுதியில் உள்ள ஆற்றில் இன்று காலை குளிக்க சென்ற அந்த நபர் மிதந்து வந்த அட்டைப் பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துப் பார்த்த போது, அந்த ரூபாய் நோட்டுகளில், இவை போலியானது என்றும், படப்பிடிப்புக்காக மட்டுமே அச்சடிக்கப்பட்டதாகவும் எழுதப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.