ஜப்பானை புரட்டிப் போட்ட சக்தி வாய்ந்த நான்மடோல் புயலால் லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
புயல் கியாஷூ தீவை கடந்த போது மணிக்கு 234 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி கனமழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டன.
மின்கம்பங்கள் சாய்ந்ததால் சுமார் மூன்றரை லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக, புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதோடு நூற்றுக் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், மழை பாதிப்பில் சிக்கி இருவர் உயிரிழந்ததாகவும் 90 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.