ஆப்கானிஸ்தானில் டிக்டாக் மற்றும் பப்ஜி செயலிகளை தடை செய்ய தலிபான்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான் அரசு விதித்து வருகிறது. பல்வேறு இணையதளங்களுக்கும் அங்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆப்கனில் 23.4 மில்லியன் இணையதளங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த 90 நாட்களுக்குள் டிக்டாக் மற்றும் பப்ஜி செயலி பயன்பாடுகளை தடை செய்யப் போவதாக தலீபான் தலைமையிலான தொலைத்தொடர்பு துறையின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.