வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. Michoacán மாகாணத்தின் தென்கிழக்கே 46 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 9.4 மைல் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. நில அதிர்வுகள் உணரப்பட்டதால், பொதுமக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
மெக்சிகோ கடற்கரையின் சில பகுதிகளில் சுனாமி ஏற்படக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கத்திற்கு மன்சானிலோவில், ஒரு வணிக வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.