ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கச்சா எண்ணெய்யை கடனுக்கு வழங்கும்படி பாகிஸ்தான் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் வளைகுடா நாடுகளிடம் பாகிஸ்தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது.
சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் பாகிஸ்தானுக்கு கடனுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வந்தன.
உஸ்பெகிஸ்தான் ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை மூன்று முறை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கச்சா எண்ணெய்க்கான கோரிக்கையை முன்வைத்துள்ளார்