அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் நடுவானில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதி தரையில் விழுந்து நொறுங்கின.
விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.