மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட கிராமம் என்ற அடையாளத்தை மாற்று விதமாக கிரம மக்கள் தினமும் காலையில் தேசிய கீதம் பாடிய பிறகே அன்றாட பணிகளை தொடங்குகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள முல்சேராவி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர்.
இந்த கிராமம் மாவோயிஸ்டுகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இயல்பு வாழக்கைக்கு திரும்பும் வகையில் போலீசார் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
கிராமத்தில் மக்கள், கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் போலீசார், ஒன்று சேர்ந்து தேசிய கீதம் பாடுகின்றனர்.