ஆப்பிள் நிறுவன செல்போன்களில் உள்ளது போல் சாம்சங் நிறுவன போன்களிலும் செயற்கைக்கோள் வழி இணைப்பு வசதி கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவே, ஆப்பிள் நிறுவனத்திற்கு முன்பே தனது சாதனங்களில் செயற்கைக்கோள் இணைப்பை வழங்கியது. ஹூவேயின் 'மேட் 50' ரக போன்களில், பயனர்கள் சீனாவின் பெய்டு செயற்கைக்கோள் நெட்வொர்க் மூலம் தகவல்களை அனுப்பலாம்.