புதுச்சேரி குழந்தைகள் மற்றும் மகளிர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 192 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீ ராமலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி, புதுச்சேரி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில், படுக்கை வசதியுடன் கூடிய காய்ச்சல் சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த ஸ்ரீ ராமலு, எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 25-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் காய்ச்சலின் வீரியத்தை பொருத்து விடுமுறையை நீட்டிக்க பரிந்துரைக்கப்படும் என்றார்