பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் நிறைவையொட்டி ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் புகழ் பெற்ற மணல் சிற்பி சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடித்துள்ளார்.
1213 மண்பாண்ட தேநீர் கோப்பைகளைக் கொண்டும் 5 டன் மணல் கொண்டும் இந்த மணல் சிற்பத்தை அவர் படைத்துள்ளார்.இதில் பிரதமர் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண ஒரு தேநீர் விற்பனையாளராக வாழ்க்கையைத் தொடங்கி இன்று நாட்டின் பெருமை மிக்க பதவியில் அமர்ந்திருக்கும் மோடியின் உயர்வைப் போற்றும் வகையில் தேநீர்க் கோப்பைகளைப் பயன்படுத்தியதாக சுதர்சன் பட்நாயக் தெரிவித்தார்.