பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தின் மர்ம மரணம் தொடர்பான வழக்கை கோவா போலீசாரிடம் இருந்து சிபிஐ ஏற்றுக் கொண்டது.
இதனால் வழக்கின் தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டன.சிபிஐ தனியாக முதல் விசாரணை அறிக்கையை பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுளளது.
கடந்த மாதம் 12ம் தேதி கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்று இவ்வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.