லண்டனில் அடுத்த வாரம் நடைபெறும் லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
41 வயதாகும் பெடரர், கடந்த 1996ம் ஆண்டில் தனது 14 வயது தொடங்கி கடந்த 24 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 2003ல் முதன்முறையில் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
தொடர்ந்து ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் 19 கிரான்ட்ஸ்லாம் பட்டங்களையும், 103 ஏடிபி தனிநபர் பட்டங்களையும் அவர் வென்றுள்ளார்.
237 தொடர் வெற்றிகளை குவித்திருப்பதுடன், ஏடிபி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் வீரராக 310 வார காலம் இருந்துள்ளார்