ரஷ்ய அதிபர் புதின் காரில் சென்றபோது அவரை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும், அதிலிருந்து அவர் தப்பி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உக்ரைனுக்கு எதிராக ரஸ்யா போர் நடத்தி வரும் நிலையில் புதின் பயணித்த காரின் இடதுபக்க டயரை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், புகை எழுந்த நிலையில் கார் பாதுகாப்பான இடத்துக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதாக யூரோ விக்லி நியூஸ் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. புதின் கடந்த 2017ம் ஆண்டு அளித்த பேட்டியின்போது 5 முறை தன்னை கொல்ல முயற்சி நடைபெற்றதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.