பாகிஸ்தானில் சுமார் 1,200 மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அங்கு டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நடமாடும் மருத்துவமனைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.