புதுச்சேரி மின்துறையில் ஜிஎஸ்டிக்கு செலுத்தவேண்டிய 55 லட்சம் ரூபாயை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி, மோசடி செய்த மின்துறை காசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அரசின் தலைமை மின்துறை அலுவலகத்தில் காசாளராக பணியாற்றி வரும் யோகேஷ் என்பவர், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து, மின் துறை அலுவலகம் , அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி தொகையான 55 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை செலுத்தாமல் தனது வங்கி கணக்கிற்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
காசாளர் யோகேஷை கைது செய்துள்ள போலீசார், அவரது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.