ஆந்திரா மாநிலம் என்.டி.ஆர். மாவட்டத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட 5 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் ரோடு ரோலர் ஏற்றி அழிக்கப்பட்டது.
ஆந்திராவில் மது விலை அதிகமாக இருப்பதால், அண்டை மாநிலங்களில் இருந்து மதுக்கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஜயவாடா போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில், நந்திகாமா பகுதியில் இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.