பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள செஹ்வான் நகரில் வீசிய புழுதிப் புயலால், வெள்ள பாதிப்பில் வீடுகளை இழந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள், காற்றில் பறந்தன.
அந்நாட்டில் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவு பெய்த கனமழையால் சுமார் 3 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் வீடுகளை இழந்து சாலையோரங்களில் மக்கள் தங்கியிருந்த கூடாரங்களும் தற்போது புழுதிப் புயலால் சேதமடைந்த நிலையில், அடுத்த சில நாட்களில் இப்பகுதியில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.