மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் உணவு பற்றாக்குறையால் சிக்கித் தவிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் 3.6 மில்லியன் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்ததாக சர்வதேச மீட்புக்குழு மதிப்பிட்டுள்ளது. துருக்கியில் இருந்து உணவு, மருந்துகள் மற்றும் கூடாரங்கள் வந்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் எர்டோகனுடன் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது உணவு பற்றாக்குறையை சமாளிக்கவும், புனரமைப்புப் பணிகளுக்கும் துருக்கியிடம் உதவி கோரியதாக கூறப்படுகிறது.