சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
11 மாதங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த அவர், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது, நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. பொறுப்புத் தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.