உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், உலக பால்வள உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திரமோடி இன்று தொடங்கி வைத்தார். மாநாடு தொடர்பான கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பெண்களே பால்வளத்துறையின் உண்மையான தலைவர்கள் என்றும், 2014 ஆம் ஆண்டு 146 மில்லியன் டன்னாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி தற்போது 44 சதவீதம் அதிகரித்து 210 மில்லியன் டன்னாக அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.