உத்தரபிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்களை ரோடு ரோலரை ஏற்றி போலீசார் அழித்தனர்.
ஹமிர்பூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து பழுதடைந்த ஆயுதங்களை அழிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, அந்த ஆயுதங்களை வரிசையாக வைத்து அதன் மீது ரோடு ரோலரை ஏற்றி போலீசார் அழித்தனர்.