மும்பையில் உள்ள தாதர் காவல்நிலைய வளாகத்தில் விசாரணைக்கு வந்த ஏக்நாத் ஷிண்டே தரப்பு எம்.எல்.ஏ சதா சர்வாங்கர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், எம்.எல்.ஏ, அவரது மகன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தாதர் பகுதியில், கடந்த இரு நாட்களுக்கு முன் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது, ஏக்நாத் ஷிண்டே - உத்தவ் தாக்ரே அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தரப்பை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ், உத்தவ் தாக்ரே அணியைச் சேந்த 5 பேர் கைது செய்யப்பட்டு 25 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
தொடர்ந்து, உத்தவ் தாக்ரே அணியினர் அளித்த புகாரின் கீழ் கலவரத்தை தூண்டுதல் மற்றும் ஆயுத தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ மீது வழக்கு பதியப்பட்டது.