கேரளாவின் பத்தணம்திட்டா வனப்பகுதியில் உள்ள சாலையில் சென்ற ஆட்டோவை எதிரே வந்து வழிமறித்த காட்டெருமை ஒன்று, தனது கொம்பால் முட்டி தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
இரவு நேரத்தில் ஆட்டோவில் ஓட்டுநர் மட்டும் தனியாக பயணித்த நிலையில், காட்டெருமை முட்டி மோதியதில் ஆட்டோ முன் பகுதி சேதமடைந்தது. இந்த காட்சியை ஆட்டோவிற்கு பின்னால் நின்ற காரில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர்.