சீனாவில் மருத்துவப் படிப்பு தொடர்பான எச்சரிக்கை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் அவசியம் என்று மத்திய அரசு விரிவான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
கட்டாய சீனமொழி பயிலுதல், தகுதித்தேர்வில் தேர்ச்சி , கட்டாய நீட் தேர்வு தகுதி என்று பல்வேறு கட்டாயத் தகுதிகளை மாணவர்கள் பெற வேண்டும் என்பதையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதையும் இந்திய தூதரகம் பட்டியலிட்டுள்ளது.
சீன பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியை மேற்கொள்ள மாணவர்கள் ஆர்வம் காட்டி வரும்நிலையில், மாணவர்கள், நன்கு திட்டமிட்டு பயணத்தைத் தொடங்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.