சென்னை அரும்பாக்கத்தில் உணவு டெலிவரி போல வீடுகளுக்கு போதை மாத்திரை டெலிவரி செய்து வந்த zomato ஊழியரை கைது செய்து, 600 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
எம்எம்டிஏ காலனி பகுதியில் வலி நிவாரணி மாத்திரையை போதைக்காக ஒருவர் டெலிவரி செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மாத்திரை ஆர்டர் செய்த போலீசார், மாத்திரை கொண்டு வந்த அரும்பாக்கத்தை சேர்ந்த zomato ஊழியர் முனியசாமியை மடக்கிபிடித்தனர், கூட்டாளிகளான எம்ஜிஆர் நகர் ராஜி, ஜான் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.