ராணி இரண்டாம் எலிசெபத்தின் மறைவை அடுத்து, அவரது கோஹினூர் கிரீடம் புதிய மன்னரான சார்லசின் மனைவியான கமீலா வசம் செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.
2 ஆயிரத்து 800 வைர கற்கலால் அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த கிரீடத்தில், 105 காரட் கோஹினூர் வைரம் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கிரீடம் 1937 ஆம் ஆண்டு ஆறாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக உருவாக்கப்பட்டது.
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட அந்த வைரம், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலேயர்களின் கைகளுக்குச் சென்றன.
கடந்த காலங்களில், இந்தியா அந்த வைரத்தை திரும்பக் கோரியபோது அது தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி இங்கிலாந்து மறுத்தது.