இந்தியாவில் இருந்து உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது.
நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்ததால் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க பாசுமதி அல்லாத அரிசிக்கு நேற்று 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்ட நிலையில், உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடைந்த அரிசியின் ஏற்றுமதிக் கொள்கை இலவசம் என்பதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது.