இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை ஒட்டி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் தேவாலயத்தில், ராணி எலிசபெத் வாழ்நாளின் ஒவ்வொரு ஆண்டை குறிக்கும் வகையில் 96 முறை மணிகள் ஒலித்தன.
70 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்த ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால், 96வது வயதில் பால்மோரல் அரண்மனையில் நேற்று காலமானார்.
இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.