உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 5ஆவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது சாதாரணமான சாதனை அல்ல என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அந்த சாதனை நாம் மேலும் கடினமாக உழைக்கவும், பெரிய இலக்குகளை அடையவும் நம்பிக்கை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சூரத் அருகே அரசின் நலத்திட்ட பயனாளிகள் இடையே காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாடினார். ஆரோக்கியமான இளைஞர்கள் தேசத்தின் ஆரோக்கியமான எதிர்காலமாக கருதப்படுவார்கள் என்றும், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் எய்ம்ஸ் போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் அவை உறுதி செய்யப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.