எரிசக்தி விநியோகத்தை ரஷ்யா ஆயுதமாக பயன்படுத்துவதாக மேற்கத்திய நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ரஷ்ய அதிபர் புதின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
விளாடிவோஸ்டாக்கில் நடைபெற்று வரும் கிழக்கு பொருளாதார மன்ற அமர்வின் கூட்டத்தில் பேசிய அவர், இறக்குமதி செய்வோரின் தேவைக்கேற்ப எரிவாயு விநியோகம் செய்யப்படுவதாகவும், டர்பைன் பிரச்சனையால் நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வழியாக எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.