நாட்டு மக்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது சிலி அதிபரை சுற்றி சைக்கிளில் வலம் வந்த சூப்பர்மேன் சிறுவனின் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தலைநகர் சான்டியாகோவில் புதிய வரைவு மசோதா தொடர்பாக அதிபர் கேப்ரியல் போரிக் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஹெல்மெட்டுடன் சைக்கிளில் வலம் வந்த சூப்பர்மேன் உடை அணிந்திருந்த சிறுவன், அதிபரை பலமுறை சுற்றி வந்து பலரது கவனத்தை ஈர்த்தான்.