அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஆரம்ப பள்ளியொன்றில், 21 பேர் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, உவால்டே நகரில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன.
ராப் ஆரம்பப் பள்ளியில் கடந்த மே மாதம் 24-ந்தேதி நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டது அந்நாட்டையே உலுக்கியது.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்ட நிலையில், 3 மாதத்திற்கு பின் அந்த பள்ளியை தவிர மற்ற பள்ளிகள் திறக்கப்பட்டன.
ராப் ஆரம்ப பள்ளி மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள மற்ற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல் நாள் ஆர்வமுடன் பள்ளி பேருந்தில் ஏறி மாணவர்கள் பள்ளி சென்றனர்.