தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியான ரவி நாராயண் என்பவரை பணப்பரிவர்த்தன் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
1994 ஏப்ரல் முகல் 2013 மார்ச் வரை அவர் தேசியப் பங்குச் சந்தையின் தலைமைப் பொறுப்பு வகித்தார். அப்போது தேசியப் பங்குச் சந்தையின் ஊழியர்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து கோடிக்கணக்கான பணப்பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான புகார்களும் எழுந்தன. கடந்த ஜூலை மாதத்தில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கிலும் அமலாக்கத்துறையினர் சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்திருந்தனர்.
இதன் அடிப்படையில் தற்போது ரவி நாராயண் கைது செய்யப்பட்டுள்ளார்.