டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டா புல்வெளிகளை கர்தவ்ய பாதை என பெயர் மாற்றம் செய்ய அரசு முடிசெய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பெயரை ஏற்றுக்கொள்வதற்காக டெல்லி முனிசிபல் கவுன்சிலில் நாளை சிறப்புக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், புதுப்பிக்கப்பட்ட ராஜபாதையை பிரதமர் மோடி திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காலனித்துவ மனநிலை தொடர்பான சின்னங்களை ஒழிக்க வேண்டும் என கடந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.