டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி விபத்தில் பலியான சம்பவத்தில் விபத்து குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலம் உத்வாடாவில் உள்ள (udvada) கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் மிஸ்திரி மும்பை திரும்பினார். பின் இருக்கையில் சீட் பெல்ட் அணியாமல் மிஸ்திரியும், ஜெகாங்கீர் பண்டோல் என்பவரும் பயணித்த நிலையில், முன் இருக்கையில் அமர்ந்து பிரபல மகப்பேறு மருத்துவர் அனஹிதா பன்டோல் காரை ஓட்டி வந்துள்ளார். அருகில் அவருடைய கணவர் டேரியஸ் பண்டோல் அமர்ந்திருந்தார். சூர்யா நதி மீது பழைய மற்றும் புதிய பாலங்கள் என 2 பாலங்கள் உள்ள நிலையில், எதில் செல்வது என தெரியாமல் குழம்பி, பின்னர் பழைய பாலத்தில் செல்ல முயற்சிக்கையில், அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருக்கும் டிவைடரில் மோதியுள்ளது.
அப்போது சீட் பெல்ட் அணியாத மிஸ்திரி, ஜெகாங்கீர் ஆகியோரின் தலை முன்பக்கமாக மோதியதில் காயமடைந்து 2 பேரும் பலியானது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.