சென்னை அடையாறில் யோகா கல்சுரல் சொசைட்டி மற்றும் சன்ரைஸ் யோகா சென்டர் சார்பில் நடைபெற்ற யோகாசன போட்டியில் திரளானோர் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
யோகாசன நிபுணர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 3வயது முதல் 30வயது வரை உள்ளோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்கு பரிசு கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டது.