இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.39 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லி சொகுசு கார் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நேஷனல் கிரைம் ஏஜென்சியிடம் இருந்து கார் திருடப்பட்டது குறித்து தகவல் வந்ததையடுத்து கராச்சியில் உள்ள பங்களா ஒன்றில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு திருடப்பட்ட பென்ட்லி முல்சேன் சொகுசு கார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கார் சில வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து திருடப்பட்டதாகவும், திருடியவர்கள் கிழக்கு ஐரோப்பா நாட்டிலிருந்து ஒரு மூத்த அதிகாரியின் பெயரை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.