110 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் எச்சங்கள் 8 கே அல்ட்ரா ஹெச் டி தரத்தில் அதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
1912-ஆம் ஆண்டு ஏப்ரல் 14 மற்றும் 15ந் தேதிக்கு இடைப்பட்ட இரவில் டைட்டானிக் கப்பல் புறப்பட்ட மூன்றே மணிநேரத்தில் பனிப்பாறை மீது மோதி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் சுமார் 1500 பேர் உயிரிழந்தனர். 110 ஆண்டுகள் கடந்த பின்னரும் இது மிகப்பெரிய கடல் விபத்தாக கருதப்படுகிறது.
சர்வதேச ஆழ்கடல் ஆய்வாளர்கள் மேற்கொண்ட நீர்மூழ்கி பயணங்களின்போது, ஆழ்கடலில் மூழ்கி சிதைந்து கிடக்கும் அந்தக் கப்பலின் 200-பவுண்டு நங்கூரம் சங்கிலி, ஒற்றை முனை கொதிகலன் உள்ளிட்ட பாகங்கள் குறித்த வீடியோ காட்சிகளை படம் பிடித்துள்ளனர்.