இந்திய விமானப்படையில் உள்ள 15 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் மிகவும் நல்ல நிலையில் உள்ளதாகவும், அவற்றில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் போயிங் இந்தியா நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.
என்ஜின்களில் தீ விபத்து ஏற்பட்டதால் தன்னிடமுள்ள 400 சி எச் - 47 சினூக் ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அமெரிக்க ராணுவம் தடைவிதித்தது.
இந்திய விமானப்படையிடமும் இதுபோன்ற 15 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் உள்ளதால், இது குறித்து இந்த ஹெலிகாப்டர்களை தயாரித்த போயிங் நிறுவனத்திடம் இந்திய விமானப்படை விளக்கம் கேட்டுள்ளது.