Windfall Tax எனப்படும் மூலதன ஆதாய வரியை மத்திய அரசு இன்று முதல் உயர்த்தியுள்ளது. அதன்படி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல் மீதான சந்தை ஆதாய வரி ஒரு லிட்டருக்கு 7 ரூபாயில் இருந்து 13 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், விமான எரிபொருள் ஏற்றுமதி மீதான சந்தை ஆதாய வரி இரண்டு ரூபாயில் இருந்து 9 ரூபாயும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரியை டன்னுக்கு 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 13 ஆயிரத்து 300 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.