மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்ட பாஜக பிரமுகரும் நடிகையுமான சோனாலி போகத்தின் உடலில் 46 இடங்களில் காயங்கள் இருந்ததாக தகவல் வெளியானது.
மர்மமான முறையில் சோனாலி இறந்ததும் அவர் உடல் கோவாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால் அவர் உடலுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வு சோதனையின் போது இந்த காயங்கள் பற்றி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் அவர் போதைப் பொருள் உட்கொண்டாரா என மருத்துவர்கள் நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.