ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ஓராண்டு பூர்த்தி அடைந்துள்ளதை தாலிபன்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
தலைநகர் காபூல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இன்று தேசிய விடுமுறை அளிக்கப்பட்டது.
காபூலில் உள்ள முன்னாள் அமெரிக்க தூதரகம் முன்பாக திரண்ட தாலிபன்கள் அங்கு அந்நாட்டுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர்.
பட்டாசுகளை வெடித்தும், துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் அவர்கள் இதனை கொண்டாடினார்கள்.