சீன நிறுவனங்கள் தயாரிக்கும் 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தடைவிதிக்கும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
செல்போன் உற்பத்தியில் உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், இருப்பினும் ஒரு குறிப்பிட்ட நிறுவனங்களின் செல்போன் விற்பனையை இந்தியாவில் தடை செய்யும் எண்ணம் எதுவும் அரசிடம் கிடையாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதை அதிகரிக்குமாறு சில சீன மொபைல் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தேவை தற்போது அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.