அமெரிக்கர் ஒருவர் ராட்சத பூசனிக்காயில் அமர்ந்தபடி மிசோரி ஆற்றில் 61 கிலோமீட்டர் மிதந்து சென்று சாதனை படைத்தார்.
டுவன் ஹன்சென் என்ற அந்த நபர் தனது 60 வது பிறந்த நாளன்று பெலவியூ நகரிலிருந்து நெப்ராஸ்கா நகரம் வரை, 12 அடி சுற்றளவு கொண்ட பூசனியில் மிதந்து சென்றார்.
கரடு முரடான ஆற்றுப்பாதை வழியாக, 11 மணி நேரம் நீடித்த இந்த சாகசப்பயணத்திற்காக தனது வீட்டு தோட்டத்தில் வளர்ந்த 384 கிலோ பூசனியை அவர் பயன்படுத்தினார்.