இந்தியாவில் இருந்து வழக்கமாக மாடு மேய்க்க டெம்சாக் பகுதிக்கு செல்லும் இந்திய எல்லைப் பகுதி கிராமவாசிகளை சீன ராணுவம் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்தது.
இதையடுத்து இந்திய ராணுவ அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி பாரம்பரியமான இச்செயலை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.
சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது என்றும் இருதரப்பிலும் மோதல் ஏதும் இல்லை என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் பதற்றமான சூழலும் படைக்குவிப்பும் நீடித்து வருகிறது.