பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதால் இந்தியாவில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் அரசு பரிசீலிக்கலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளத்தில் பயிர்கள் அழிந்ததால் காய்கறிகள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் விலையும் அதிகரித்துள்ளது.
எனவே இந்தியாவில் இருந்து காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று நிதியமைச்சர் மிஃப்தா கூறியதாக பாகிஸ்தான் அரசு ரேடியோ தெரிவித்துள்ளது.