மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ரயில் முன் நின்று பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சரியான நேரத்தில் ரயிலை நிறுத்தி அப்பெண்ணை ரயில் ஓட்டுநர் காப்பாற்றினார்.
சனிக்கிழமையன்று மும்பையின் பைக்குலா ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது, ஒரு பெண் தண்டவாளத்தில் நடந்து சென்று திடீரென அதன் முன் நின்றார்.
ரயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பெண்ணை நோக்கி கூச்சலிட்ட நிலையில், ரயிலின் ஓட்டுநர் உடனடியாக பிரேக்கை அழுத்தி அதனை நிறுத்தினார். அப்போது, ஆர்.பி.எஃப். காவலர் ஒருவர் ஓடிச் சென்று அந்த பெண்ணை மீட்டார்.